மாணவர் கண்டுபிடித்த ட்ரோன்

குவாலியர்:
மத்திய பிரதேச மாநிலம் குவாலியருக்கு சேர்ந்த பள்ளி மாணவர் மெத்நேஷ் திரிவேதி, மூன்று மாதங்கள் கடின உழைப்பின் மூலம் ஒரு ட்ரோன்-காப்டரை வடிவமைத்து இருக்கிறார். இந்த ட்ரோன், ஹெலிகாப்டரைப்போல் செயல்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், 80 கிலோ எடை கொண்ட ஒருவரை ஆறு நிமிடங்கள் வரை பறக்கச் செய்யும் திறன் கொண்டது.
இதுகுறித்து பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், "திரிவேதியின் ட்ரோன் புதுமை மட்டுமல்ல; அது இயந்திரவியலில் அவருக்கு உள்ள ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. இளைஞர்கள் இதுபோன்ற பொறுமையுடன் தங்கள் கனவுகளை சாதிக்க முனைந்தால், நம் நாடு புதிய உயரங்களுக்கு செல்வதற்கு இது உதவும்," என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.